Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
ஐரோப்பா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கான புதிய விசா நடைமுறை!
22/08/2024 Duración: 02minஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்குச் செல்ல விரும்பும் ஆஸ்திரேலியர்கள் விரைவில் புதிய வகையான பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
-
3Gஐ மூடுவது ஏன் தாமதமாகிறது? எந்த அலைக்கற்றை நமக்கு உகந்தது?
22/08/2024 Duración: 09minஆஸ்திரேலியாவில் இனி 3G அலைக்கற்றையை நிறுத்திவிடுவதற்கு அரசும் தொலைபேசி நிறுவனங்களும் முடிவு செய்தன. ஆனால் 3G அலைக்கற்றையை நிறுத்திவிட முடிவு செய்தாலும், நிரந்தரமாக மூடும் திட்டம் தொடர்ந்து தாமதமாகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் மெல்பன் நகரில் Data Analystயாக பணியாற்றும் சுரேஷ் பாபு அவர்கள். அவாவ்ர்டு உரையாடியவர்: றைசெல்.
-
Award winning Tamil Coffee Roaster - ஆஸ்திரேலியாவின் முதல் coffee வறுக்கும் தமிழர்!
22/08/2024 Duración: 12minAniruth had set up his own roastery in Sydney. His mother, Bamini, longed for the taste of the traditional South Indian filter coffee she had once enjoyed so much. What does Aniruth do? He launches Malgudi Days Coffee. - ஊரில் அருந்தியது போல் ஆஸ்திரேலியாவில் காப்பி அருந்த விருப்பம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு Malgudi Days Coffee என்ற பெயரில் விடை கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திவரும் அனிரூத் மற்றும் அவரது தாயார் பாமினி அவர்களோடு குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
-
அனுமதி இல்லாமல் ஒருவரின் ஆபாசபடத்தை வெளியிட்டால் சிறைத் தண்டனை
22/08/2024 Duración: 04minசெய்திகள்: 22 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
மெல்பன் வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தில் திருட்டு: இருவர் கைவரிசை
21/08/2024 Duración: 08minமெல்பன் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தினுள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் புகுந்து, சுமார் 5,000 டாலர்களை உண்டியலுடன் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய மேலதிக விவரங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மெல்பன் வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் ஷன் பிள்ளை அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன். ——————————————————————————————————————- The recent theft at Melbourne's Sri Vakrathunda Vinayagar temple has heightened concerns regarding the security of religious institutions. CCTV footage captures two individuals allegedly breaking into the temple and stealing over $5,000 from the donation box. This incident follows a similar one at the Murugan Temple in Rockbank in western suburb of Melbourne.Listen to this podcast for more details about the incident, as SBS Tamil Praba Maheswaran interviews the temple President Shan Pillai.
-
Incoming Passenger காகித அட்டைகளுக்கு முடிவு கட்டும் ஆஸ்திரேலியா!
21/08/2024 Duración: 02minஆஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் Incoming Passenger Card-உள்வரும் பயணிகள் அட்டையை விரைவில் டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
-
விக்டோரிய காவல்துறையில் இணைவது எப்படி?
21/08/2024 Duración: 20minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம் இது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றி காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் டினேஷ் நெட்டுர் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிறு வயதிலிருந்தே சிலம்பத்தின் சிற்பி அதீஸ்ராம் !
21/08/2024 Duración: 10minதமிழ்நாட்டில், தனது எட்டாம் வயதிலிருந்து சிலம்பக் கலையைக் கற்று, அதில் பல விருதுகளைக் குவித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஜெயராமன் அதீஸ்ராம் அவர்களையும், அவருக்கு ஊக்கம் கொடுத்து உறுதுணையாக இருக்கும் அவரது தந்தை நா. ஜெயராமன் அவர்களையும் நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்திய பேசுபொருள்: பாலியல் வன்கொடுமை & கலைஞர் நாணயம்
21/08/2024 Duración: 09minகொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் மற்றும் கலைஞர் நாணயம் வெளியீடு ஏற்படுத்திய அரசியல் சர்ச்சை குறித்த செய்திகளின் பின்னணிகளை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
உங்கள் மனைவியைப் பாராட்ட வேண்டிய நேரம்!
21/08/2024 Duración: 11minபெர்த் நகரில் இயங்கும் SKY மனவளக் கலை மையம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 அன்று மனைவி நல வேட்பு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் அமைப்பாளர்களான கவிதா குப்புசாமி, நீதா ஜெயச்சந்திரன், வேலுசாமி ராமசாமி; மற்றும் பிரபாகர் சின்னத்தம்பி ஆகியோருடன் மையம் பற்றியும் மற்றும் இந்த நிகழ்வு பற்றியும் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
-
ஊதியத்திருட்டு: இலங்கை முன்னாள் துணைத்தூதருக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு
21/08/2024 Duración: 07minகன்பராவில், தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில், இலங்கையின் முன்னாள் துணைத் தூதர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 543,000 டொலர்களை வழங்க வேண்டுமென பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா - மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம்
20/08/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
சிட்னியில் பதிவுசெய்யப்படாத வரி முகவராக செயற்பட்டவருக்கு 1.8 மில்லியன் டொலர்கள் அபராதம்!
20/08/2024 Duración: 02minசட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிட்னி நபருக்கு பெடரல் நீதிமன்றம் சுமார் 1.8மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டுக்கு வெளியே தடுப்பிலுள்ள 140 பேரையும் விடுவிக்கக்கோரி மனு
19/08/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன?
19/08/2024 Duración: 06min'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?
-
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை: mpox வைரஸ் ஏற்படுத்திய சுகாதார அவசர நிலை
19/08/2024 Duración: 11minmpox வைரஸ் பரவுவதை உலகளாவிய சுகாதார அவசர நிலை என்று WHO அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், இந்த வைரஸ் கவலைக்குரிய ஒரு புதிய திரிபா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அதிகாரிகள் முனைந்துள்ளார்கள்.
-
இந்தியாவை உலுக்கி வரும் பெண் மருத்துவர் கொலை விவகாரம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
19/08/2024 Duración: 09minஇந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்:
-
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதில் மாற்றம் கொண்டுவர புதிய சட்டம்?
19/08/2024 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/08/2024) செய்தி.
-
தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அகதிகள்- புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்
17/08/2024 Duración: 10minஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சனிக்கிழமை (17 ஆகஸ்ட்) தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் அடலைட் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கேதீஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
16/08/2024 Duración: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 17 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்