Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 63:28:43
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை வருமா?

    14/08/2024 Duración: 09min

    உங்கள் மனதை, சூதாட்டம் எவ்வாறு பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

  • மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாசிப்பு, கணிதத்தில் பின்னடைவு - NAPLAN

    13/08/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியாவின் எந்த இடங்களில் வீடுகள் மிக வேகமாக விற்பனையாகின்றன?

    13/08/2024 Duración: 03min

    நாட்டில் வீடுகள் வேகமாக விற்பனையாகும் இடங்களின் பட்டியலில் மேற்கு ஆஸ்திரேலிய புறநகர்கள் பெரும்பாலான இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் பட்டியலை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துபவர்களைப் பிடிக்க தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கமராக்கள்

    13/08/2024 Duración: 02min

    வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்தும் ஓட்டுனர்களை பிடிப்பதற்கான கமராக்கள், தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் பாவனைக்கு வந்துள்ள பின்னணியில், இதில் அகப்படுபவர்களுக்கு அடுத்த மாதம் முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சூதாட்ட விளம்பரங்களைத் தடை செய்ய Greens வலியுறுத்தல்

    12/08/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • ஒலிம்பிக் 2024 : சாதனைகள், சவால்கள், பெருமைகள்

    12/08/2024 Duración: 13min

    ஃபிரான்சில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. பாரீஸ் நகர குடியிருப்பாளரும் ஊடகவியலாளருமான வாசுகி குமாரதாசன் அவர்கள் இந்தப் போட்டிகள் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் விவரிக்கிறார்.

  • இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

    12/08/2024 Duración: 08min

    வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் - ஆதரவும் - எதிர்ப்பும், மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - இந்திய முழுவதும் மருத்துவர்கள் போராட்டம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படுள்ளதா? மற்றும் சென்னையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • "எங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்"

    12/08/2024 Duración: 10min

    NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். புதிய குடிவரவு அமைச்சர் Tony Burke அவசரமாக சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

  • ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாள்: சாதனை படைத்தது ஆஸ்திரேலியா

    12/08/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/08/2024) செய்தி.

  • Is your child being bullied at school or online? Key steps you need to take - பாடசாலையில் அல்லது இணைய வழியாக உங்கள் குழந்தை கொடுமைப்படுத்தப்படுகிறதா? என்ன செய்யலாம்?

    11/08/2024 Duración: 09min

    Experts say that dealing with bullying behaviours is never easy but always necessary, as the harm caused can impact children for years. To provide up-to-date advice on supporting a child experiencing bullying at school or online, we consult specialists in education, psychology, and cyberbullying response. - பாதுகாப்பான மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வழங்குவது ஒவ்வொரு ஆஸ்திரேலிய பாடசாலையின் பணியாகும். ஆனால், ஒரு பாடசாலையில் ஒரு குழந்தை கொடுமைப் படுத்தப்பட்டால் அதன் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த கொடுமைப் படுத்தல் இணைய வழியாக நடந்தால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, கல்வி, உளவியல் மற்றும் இணைய வழி கொடுமைப் படுத்தப் படுதல் ஆகியவற்றில் உதவி வழங்கும் நிபுணர்களிடம் ஆலோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளைக் கேட்டறிந்து Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    09/08/2024 Duración: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 10 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • Sydney's Tamil Safe Space: A Community oasis - சிட்னியில் “தமிழ் பாதுகாப்பு இடம்”

    09/08/2024 Duración: 13min

    Tamil Safe Space (TSS), an initiative by Tamils living in Sydney, was launched on Saturday, August 3, 2024, in Wentworthville, NSW. Tamil Safe Space offers a free drop-in environment for Tamil community members facing emotional distress or suicidal crisis, where they can receive support from trained Tamil peer support volunteers. The space aims to provide individuals in distress an alternative to emergency departments, offering non-clinical and culturally safe support to help alleviate their distress. - சிட்னியில் வாழும் தமிழர்களின் முயற்சியாக “தமிழ் பாதுகாப்பு இடம்” (Tamil Safe Space) எனும் முன்னெடுப்பு கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 3, 2024) சிட்னியின் Wentworthville எனுமிடத்தில் தொடங்கப்பட்டது. தமிழ் பாதுகாப்பு இடம் என்பது துயரத்தில் இருக்கின்றவர்களுக்கு ஆதரவும், பாதுகாப்பு வழங்கும் முயற்சியாகும். இந்த முன்னெடுப்பு குறித்து மருத்துவர் ஐங்கரனாதன் செல்வரத்தினம், கல்யாணி இன்பகுமார் மற்றும் மருத்துவர் தவசீலன் ஆகியோர் விளக்குகின்றனர்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    09/08/2024 Duración: 08min

    இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை என்பதாலேயே சர்வதேச விசாரணை கோரி போராடுகின்றோம் என்று காணாமல்போனோரின் உறவுகள் சங்கம் கூறும் செய்தி, சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல் களம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Feeling Lonely? You are not alone! - நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கிறீர்களா? நீங்கள் தனியாக இல்லை!

    09/08/2024 Duración: 11min

    Australia's Loneliness Awareness Week is observed from 5th to 11th August. Kulasegaram Sanchayan presents a program with comments from Devakie Karunagaran, a Sydney-based Tamil writer. - ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் தனிமை விழிப்புணர்வு வாரம் அவதானிக்கப்படுகிறது. அது குறித்து, சிட்னியில் வாழும் எழுத்தாளர் தேவகி கருணாகரன் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தடகள ஆணையத்திற்கு Jess Fox தேர்வு

    09/08/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/08/2024) செய்தி.

  • மெல்பனில் பரவிய லீஜினேயரிஸ் நோய் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    09/08/2024 Duración: 09min

    மெல்பனில் லீஜினேயரிஸ் நோயின் பரவல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் அதற்குக் காரணமாகக் கருதப்படும் ஒரு குளிரூட்டும் கோபுரம் தற்போது கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீஜினேயரிஸ் நோய்ப் பரவல் பற்றிய பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

  • மனிதம்: அப்டீன்னா என்ன?

    08/08/2024 Duración: 08min

    தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு “மனிதம்” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.

  • Tamil poet honoured with Singapore’s highest cultural award - சிங்கப்பூரின் அதியுயர் இலக்கிய விருது பெற்ற தமிழர்

    08/08/2024 Duración: 25min

    Singaporean poet and writer K.T.M. Iqbal was awarded the country’s highest cultural award Cultural Medallion, by President Tony Tan Keng Yam last week. The Tamil poet of Indian-origin who has written over 200 poems for children, and much more on love, life, and nature. - சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவழிக் கவிஞர் ஒருவர் KTM இக்பால் அவர்கள். சிங்கப்பூர் அரசு வழங்கும் உயரிய கலாச்சாரப் பதக்கமான அதி உயர் கலாச்சார விருதை, கடந்த வாரம் சிங்கப்பூர் அதிபரின் கையால் பெற்றிருக்கிறார் கவிஞர் இக்பால் அவர்கள்.

  • நீங்கள் இறந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    08/08/2024 Duración: 08min

    நம் வாழ்வில் மிகவும் உறுதியாக நடக்கும் ஒரு விடயம் என்றால் மரணம்தான். இளையோர் முதியோர் ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடுமில்லாமல் அனைவரும் இறுதியில் சந்திப்பது மரணத்தைத்தான்.

  • சட்டத்தின் கைகளில் Google ஆதிக்கம் ஆட்டம் காண்கிறதா?

    08/08/2024 Duración: 10min

    அதன் ஆதிக்கத்தைப் பயன் படுத்தி, கூகுளின் தேடு பொறி (Google Search Engine) அதற்குப் போட்டியாக இருக்கும் செயலிகளையும் மற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப் படுவதையும் தடுக்க சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்டது என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.

página 25 de 25