Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
வெளிநாட்டிலுள்ள பெற்றோரை இங்கு இலகுவாக வரவழைக்க என்ன வழி?
28/08/2024 Duración: 10minஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் வெளிநாடுகளில் வாழும் தமது பெற்றோரை இங்கு நிரந்தரமாக வரவழைத்துக்கொள்ள விரும்பினால், அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 30 ஆண்டுகளுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. பல பெற்றோர் தங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ள பலர், அரசு இந்நிலைமையை மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இந்தப்பின்னணியில் பெற்றோரை இலகுவாக ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்க என்னென்ன விசாக்கள் உள்ளன என்பது தொடர்பில் மெல்பனில் சட்டத்தரணியாக கடமையாற்றுபவரும் Shan Lawyers நிறுவனத்தின் இயக்குனருமான திருமலை செல்வி சண்முகம் அவர்களின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பணியிட உரிமைகள்: முழுமையான விவரம்
28/08/2024 Duración: 11minவேலை முடிந்த பின்னர், தங்கள் முதலாளிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் சட்டம் மற்றும் Casual பணியாளர்களுக்கான வரையறை உட்பட இன்னும் சில சட்டங்கள் ஆகஸ்ட் 26ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இப்புதிய சட்டங்களில் உட்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தொழிலாளர் நலன் சார் அமைப்பில் பணிபுரியும் லாவண்யாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சமையலறை non-stick பாத்திரங்கள் பாதுகாப்பானதா? என்ன எச்சரிக்கை தேவை?
28/08/2024 Duración: 09minநாம் பெரும்பாலும் சமையலறையில் பயன்படுத்தும் non-stick பாத்திரங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதையும், Nonstick பாத்திரங்களுக்கு மாற்றாக உபயோகிக்கக் கூடிய வேறு வகை பாத்திரங்கள் எவை என்றும் விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
தமிழக பேசுபொருள்: முத்தமிழ் முருகன் மாநாடு
28/08/2024 Duración: 09minதமிழக அரசு பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த செய்தியின் பின்னணியை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
விக்டோரியாவின் தெற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும்!
28/08/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/08/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
-
Why is sex and sexuality education taught in Australian schools? - SBS Examines : ஆஸ்திரேலிய பாடசாலைகளில் ஏன் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது?
26/08/2024 Duración: 06minSex ed in schools is controversial, but experts say it's vital for young people to learn about their bodies, identities, and healthy relationships. Why are some parents concerned? - ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி என்பது முக்கியமானது, ஆனால் அது சீரற்றதாகவும் மற்றும் சர்ச்சைக்குரியதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.
-
CFMEU: அரசின் முடிவுக்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்
26/08/2024 Duración: 02minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
சிறுமியைக் கொன்று கொள்கலனுக்குள் அடைத்து வீசிய நபருக்கு ஆயுள் தண்டனை - NSW நீதிமன்றம் தீர்ப்பு
26/08/2024 Duración: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Charlise Mutten என்ற 9 வயது பள்ளிச் சிறுமியை சுட்டுக் கொன்று, அவரது உடலை கொள்கலனுக்குள் அடைத்து வீசிய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How to protect your home from Australia’s common pests - பீடைகளிடமிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாப்பது எப்படி?
26/08/2024 Duración: 08minCold weather does not mean a pest-free home. Some pests, like termites, remain active all-year round and winter is peak season for mice and rats preferring your house instead of outdoors. Bed bugs and cockroaches are also on the list of invaders to look out for. Infestations have wide-ranging consequences, including hygiene risks and even home devaluation. Learn how to prevent, identify, and deal with them. - சிறியளவிலான தொல்லை முதல் உங்கள் சொத்தின் மதிப்பைக் குறைப்பது வரை பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பீடைகள் அல்லது தீங்குயிர்களிடமிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறோம்.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
26/08/2024 Duración: 09minஇந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள் - எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு, சீமான் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் அறிவிப்பு, மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி சர்ச்சை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பணியிட உரிமை இன்று முதல் நடைமுறை!
26/08/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/08/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
மேற்கு ஆஸ்திரேலியாவிலும் அகதிகள்- புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்
25/08/2024 Duración: 11minஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் பெர்த் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து நேற்று (24 ஆகஸ்ட்) கவனஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து வித்தியாகரன் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
சமூக ஊடகங்களூடாகவா நீங்களும் நிதி ஆலோசனை பெறுகிறீர்கள்?
24/08/2024 Duración: 07minஇந் நாட்டில் வாழ்பவர்கள் மூவரில் ஒருவர் நிதி ஆலோசனை பெறுவதற்கு சமூக ஊடகங்களை நாடுகிறார்கள் என்றும் அவர்கள் பெறும் தகவலின் நம்பகத்தன்மை மற்றும் அதில் உள்ள அபாயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க கேள்விகள் இருக்கின்றன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
இந்த வார முக்கிய செய்திகள்
24/08/2024 Duración: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 23 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறும் காலம் நெருங்குகிறது!?
24/08/2024 Duración: 09minபூமியை அடுத்து மனிதன் இன்னொரு கிரகத்தில் வாழ முற்பட்டால் அது நிச்சயம் செவ்வாய் கிரகம் என்றே பல விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். அந்த கனவு சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் நம்ப ஆரம்பித்துள்ளனர். இந்த தகவல் குறித்த ஆங்கில மூலம் SBS-Newsக்காக Sydney Lang. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியா உட்பட 35 நாடுகளுக்கு இலவச விசா- இலங்கை அரசு அறிவிப்பு
23/08/2024 Duración: 02minஆஸ்திரலியா உட்பட 35 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
NSW மாநிலத்தில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
23/08/2024 Duración: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Hunter Valley பகுதியில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்!
23/08/2024 Duración: 08minசூடுபிடிக்கும் தேர்தல் களம்: தமிழ் பொது வேட்பாளர் பிரச்சார பணிகளை ஆரம்பித்தார்: தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கைகலப்பு: கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்தில் நீதியான விசாரணை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்: உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
செங்கடல் பாதுகாப்புப் பணியின் தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள ஆஸ்திரேலியா!
23/08/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/08/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் அகதிகள்- புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்
22/08/2024 Duración: 10minஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேன் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து தினூஷன் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.