Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 63:16:32
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு

    21/12/2024 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (15 – 21 December 2024) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 21 டிசம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • மெல்பன் வந்த விமானத்தினுள் அநாகரீகமான நடத்தை- இலங்கை நபர் மீது வழக்கு

    20/12/2024 Duración: 02min

    இலங்கையிலிருந்து மெல்பன் வந்த விமானத்தில் அநாகரீகமான செயலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    20/12/2024 Duración: 08min

    இந்தியாவிற்கு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க அவர்கள் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். புது டெல்லியில் அவர் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், Leptospirosis எனப்படும் எலிக்காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • அகிலன் ஏன் ‘தமிழனாக்கப்பட’ விரும்பினார்?

    20/12/2024 Duración: 09min

    ஜனவரி 2025 இல் நடைபெறும் சிட்னி விழாவில், எழுத்தாளர், நடன இயக்குனரும், நடிகருமான அகிலன் இரட்ணமோகன் தான் தமிழனாக வேண்டும் என்ற தனது முயற்சியை, “The Tamilization of Ahilan Ratnamohan” என்ற தலைப்பில் மேடையேற்றவிருக்கிறார்.

  • உங்கள் போதைப்பொருள் உயிரைக் கொல்லுமா? NSW மாநில அரசு சோதித்து சொல்லும் திட்டம்

    20/12/2024 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை

  • வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

    20/12/2024 Duración: 03min

    கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மெல்பனில் இலங்கைப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனுக்கு சிறை!

    19/12/2024 Duración: 02min

    மெல்பனில் இலங்கைப் பெண்ணான நிலோமி பெரேரா அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் குறித்த நபருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • "என்ன கருத்தைப் பதிந்தாலும் சர்ச்சை தான்"

    19/12/2024 Duración: 26min

    பதிப்பாளர், எழுத்தாளர், வலைப்பூக்களில் தொடர்ந்து தன் கருத்துகளைப் பதிந்து வருபவர், cricinfo.com என்ற கிரிக்கட் இணையதளத்தை நிறுவிய இருவரில் ஒருவர், பொறியாளார் என்று பன் முகம் கொண்ட பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்காணல். நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன்.

  • தமிழ் சமூக விடுதலைக்காக நாத்தீகத்தோடு கைகோர்த்த ஆன்மீகவாதி

    19/12/2024 Duración: 08min

    தமிழ்நாட்டில் சமயப் பணிகளை மட்டுமல்லாமல் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டவர் குன்றக்குடி அடிகளார். ஆதி திராவிடர்களை கோவில்களுக்குள் அனுமதித்தவர்; சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு, பூஜைகள் நடத்த வலியுறுத்தியவர்; தமிழ் இலக்கியவாதியாக பல நூற்களை எழுதியவர்; நாத்தீகவாதிகளோடு கைகோர்த்தவர். தமிழ் சமூக விடுதலைக்கு இறுதிவரை உழைத்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு பிறந்த விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.

  • SBS ஒலிபரப்புகள் ஆஸ்திரேலிய ஒலிக் காப்பகத்தில் நிரந்தரமாக சேர்க்கப்பட்டன

    19/12/2024 Duración: 08min

    ஆஸ்திரேலியாவின் கலாச்சார மற்றும் அரசியல் சூழலை விளக்கும் பத்து அசாதாரண ஒலிப்பதிவுகளை National Film & Sound Archive தனது Sounds of Australia காப்பகத்தின் சேகரிப்பில் சேர்த்துள்ளது.

  • நாங்களும் நிலவில் காலடி பதிக்கப் போகிறோம் !

    19/12/2024 Duración: 06min

    சந்திரனுக்கு அனுப்பப்படும் முதல் ஆஸ்திரேலிய தானியங்கி வாகனமான Roo-ver இன் முன்மாதிரி அடிலெய்ட் நகரில் வெளியிடப்பட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • மூன்று ஆண்டுகளின் பின் ஆஸ்திரேலிய தூதரகம் யுக்ரேனில் திறக்கப்படுகிறது

    18/12/2024 Duración: 03min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 19 டிசம்பர் 2024 வியாழக்கிழமை

  • Mid-year budget update: சர்வதேச மாணவர் விசா கட்டணம் $1600 ஆக அதிகரிப்பு

    18/12/2024 Duración: 07min

    Mid-year budget update எனப்படும் நிதிநிலை அறிக்கையின் மேம்படுத்தலை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers வெளியிட்டுள்ளார். இது தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் surplus - உபரி நிலைக்குப் பின்னர் பட்ஜெட் மீண்டும் déficit - பற்றாக்குறை நிலைக்குச் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். After recording two years of budget surplus, the Labor government says it expects a small deficit in the 2024-25 Financial Year, according to the government's mid-year budget update.

  • குழந்தைகள் மற்றும் முதியவர்களில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தொற்று தொடர்பில் எச்சரிக்கை

    18/12/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் Invasive pneumococcal disease (IPD) என்ற உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா நோய்த்தொற்றின் பரவல் விகிதங்கள் 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • குடும்பப் படங்களில் காவியம் தீட்டிய பீம்சிங்

    18/12/2024 Duración: 10min

    தமிழ் திரையுலகில் என்றும் நிழலாடும் திரைப்படங்களை இயக்கியவர் பீம்சிங் அவர்கள். திரைக்கதை, அக்கதையை இயக்கும் லயம், படத்தொகுப்பில் காட்டும் நுணுக்கம் இவையே ஒரு படத்தின் வெற்றிக்கு ஆணிவேர் என்பதை பீம்சிங்கின் படங்கள் இன்றும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு இந்தாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில், தமிழ் திரையுலகில் அவர் பதித்த தடங்களை விவரிக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • செய்தியின் பின்னணி: இலங்கை அதிபரின் இந்திய பயணம் & அதிமுக-பாஜக கூட்டணி

    18/12/2024 Duración: 08min

    இலங்கை அதிபரின் இந்திய பயணம் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய சர்ச்சை தொடர்பான செய்திகளின் பின்னணிகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • பாலி 9: மயூரன் & ஆண்ட்ரூவின் மரணதண்டனையும், எஞ்சியவர்களின் விடுதலையும்

    17/12/2024 Duración: 07min

    இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவந்த பாலி 9 போதைப்பொருள் கடத்தல் குழுவைச்சேர்ந்த ஐந்து ஆஸ்திரேலியர்களும் நாடு திரும்பியுள்ளர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • Border-Gavaskar Trophy: Josh Hazlewood மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார்

    17/12/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/12/2024) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • ஒவ்வொரு வாரமும் சீனாவிலிருந்து மெல்பனுக்கு வந்துபோகும் மாணவன்

    17/12/2024 Duración: 03min

    சர்வதேச மாணவர் ஒருவர் தனது பல்கலைக்கழக வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக, வாரத்திற்கு ஒருமுறை சீனாவிலுள்ள தனது சொந்த ஊரிலிருந்து மெல்பனுக்கு விமானப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நாட்டின் சில பகுதிகளில் தொடரவுள்ள கடும் வெப்பநிலை

    17/12/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

página 7 de 25