Informações:
Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
உலகளவில் கோவிட்-19 தடுப்புமருந்தை மீளப்பெறும் AstraZeneca!
08/05/2024 Duración: 02minAstraZeneca கோவிட்-19 தடுப்பூசி பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த நிறுவனம் அண்மையில் ஒப்புக்கொண்டிருந்த பின்னணியில், தமது கோவிட் தடுப்பூசிகள் உலகளவில் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Visaka Hari's 'Harikatha' in Australia! - ஆஸ்திரேலியாவில் விசாகா ஹரியின் 'ஹரிகதை'!
08/05/2024 Duración: 15minVisaka Hari is a renowned Carnatic music vocalist, storyteller, and performer of Harikatha, a traditional form of storytelling that combines music, drama, and narration. She is known for her captivating performances that blend spirituality, culture, and entertainment. This is an interview about her upcoming performance at the Swara-Laya Fine Arts Society's annual music festival in Sydney. Produced by Renuka Thuraisingham. - Swara Laya Fine Arts Society நடத்தும் Sydney Music Festival ஜூன் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கிறார் பிரபல இசைக்கலைஞரும் ஹரிகதா காலட்சேப கலைஞருமான கலைமாமணி விசாகா ஹரி அவர்கள். அவருடனான உரையாடல் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
-
Toni Tiki கொலை: தகவல் தருபவர்களுக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசு!
08/05/2024 Duración: 06minசிட்னியில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு Toni Tiki என்ற பெண் கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், கொலையாளி பற்றி தகவல் தருபவர்களுக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Important Visa Updates for International Students, Refugees, and Skilled Migrants - விசா மாற்றங்கள்: Overseas Students, அகதிகள், Skilled Migrants கவனத்திற்கு!
08/05/2024 Duración: 09minVisa policies in Australia are changing, particularly for international students, refugees, and skilled workers. Dr. Chandrika Subramanian, a solicitor and barrister in the Supreme Court of New South Wales and the High Court of Australia, provides insight into these changes. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் விசாக்களில் மாற்றம் வருகிறது. குறிப்பாக சர்வதேச மாணவர்கள், அகதிகள், திறன்கொண்டோர் தொடர்பான விசாக்களில் மாற்றம் வருகிறது. இது தொடர்பான விளக்கத்தை முன்வைக்கிறார் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இந்திய தேர்தல்: வட மாநிலங்களின் கள நிலவரம்
08/05/2024 Duración: 07minஇந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், வட மாநிலங்களில் நிலவும் கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஒன்பதாம் பாகம்.
-
அடுத்த செவ்வாய் பட்ஜெட்டில் வாழ்க்கைச் செலவு நிவாரணம், வருமான வரிக் குறைப்புகள்
07/05/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 08/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய குடும்பங்களுக்கு $400 கொடுப்பனவு!
07/05/2024 Duración: 02minகுடும்பங்கள் மீதான வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய மாநில பெற்றோர் 400 டொலர்கள் கொடுப்பனவைப் பெறவுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மெல்பன் கத்திக்குத்து தொடர்பில் தேடப்படும் இருவர்!
07/05/2024 Duración: 02minமெல்பனின் தென்கிழக்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஹமாஸுடனான காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் இஸ்ரேல் மறுத்துள்ளது
06/05/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செய்வாய்க்கிழமை 07/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
06/05/2024 Duración: 08minதேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மதம் சார்ந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு, இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வு, நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மர்ம மரணம் மற்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
Will Australia pioneer the development of a cutting-edge quantum computer? - ஆஸ்திரேலியா புதிய, திடமான quantum computer ஒன்றை உருவாக்குமா?
06/05/2024 Duración: 10minThe Federal and Queensland governments will invest $1 billion in tech company PsiQuantum to build one of the world's most powerful quantum computers in Brisbane. - உலகில், முதன்முறையாக பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள quantum computer ஒன்றை உருவாக்க, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் PsiQuantum என்ற கணினி நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.
-
NSW மாநிலத்தில் குடும்ப வன்முறை தடுப்பு திட்டங்களுக்கென 230 மில்லியன் நிதியுதவி!
06/05/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/05/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
How to talk to your kids about gendered violence, and seven ways to model good behaviour - பெற்றோர் குடும்ப வன்முறை குறித்து தங்களின் பிள்ளைகளுடன் எவ்வாறு உரையாடுவது?
06/05/2024 Duración: 11minWhen it comes to stopping violence against women, guidance on what parents should do can be challenging to find. Here’s how you could talk about these issues with young people. Cynthia Nathan who is working as a Relationship Counsellor & Educator in 3R Counselling organisation explains more. - குடும்ப வன்முறை குறித்து பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன் எவ்வாறு உரையாடவேண்டும் மேலும் உறவுகள் குறித்து பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான புரிதல் மற்றும் சிந்தனை வளர பெற்றோர் எவ்வாறு உதவலாம் போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Marriage Educatorராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இந்த வார முக்கிய செய்திகள்
04/05/2024 Duración: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 4 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
சிட்னி மேடையில் நாயிகா – ஒரு நாட்டியப் பெண்
03/05/2024 Duración: 03minநாயிகா – ஒரு நாட்டியப் பெண் என்ற மேடை நிகழ்வு சிட்னியின் Belvoir அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து அந்த நிகழ்வின் இயக்குனர் நித்தியா நாகராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
முதியவர்களின் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருமாறு வலியுறுத்தல்
03/05/2024 Duración: 02minவிக்டோரிய மாநிலத்திலுள்ள ஓட்டுநர்கள் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் வருடாந்த உடல்நலம் மற்றும் திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
1400 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு!
03/05/2024 Duración: 02minAmazon ஆஸ்திரேலியா நிறுவனம் 1400 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How I Coped with My Child's Cancer Diagnosis and Found Healing - என் குழந்தைக்கு Cancer என்றதும் என்ன செய்தேன்? நான் எப்படி மீண்டேன்?
03/05/2024 Duración: 14minWhen people around us fall ill, it can have a significant impact on our lives. Parents are especially affected when their children develop a serious illness such as cancer. Kanjana, from Sydney, shares her story with RaySel about how her seven-year-old daughter was diagnosed with cancer and the impact it had on her and her family, as well as how she coped with the experience. - நம்மை சுற்றி இருக்கின்றவர்களுக்கு நோய் காணும்போது அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரிது. அதிலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் போன்ற கடுமையான நோய் வரும்போது பெற்றோர் மிக அதிகமாக பாதிக்கப்டுகின்றனர். தனது ஏழு வயது குழந்தைக்கு புற்றுநோய் கண்டபோது அது எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் பாதித்தது என்பதையும், அதிலிருந்து தான் எப்படி மீண்டேன் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியில் வாழும் காஞ்சனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
Comparing the Advantages and Disadvantages of Electric and Hybrid Cars - Electric Car Vs Hybrid Car: சாதக பாதகங்கள் என்ன?
03/05/2024 Duración: 09minGiven the growing interest in purchasing electric vehicles (EVs), R.Sathyanathan, who has extensive experience in the media industry, explains the pros and cons of electric and hybrid cars.Produced by RaySel. - EV என்ற எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வரும் பின்னணியில், Electric Car மற்றும் Hybrid வாகனங்களின் குறித்த சாதக பாதகங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
03/05/2024 Duración: 08minபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ஊதிய அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பினை மே தின நிகழ்வில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் கிழக்கில் இடம்பெற்றன. கனிய மணல் அகழ்வுக்கு மட்டக்களப்பு வாகரை மக்கள் எதிர்ப்பு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.