Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
உங்கள் போதைப்பொருள் உயிரைக் கொல்லுமா? NSW மாநில அரசு சோதித்து சொல்லும் திட்டம்
20/12/2024 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை
-
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
20/12/2024 Duración: 03minகிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மெல்பனில் இலங்கைப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனுக்கு சிறை!
19/12/2024 Duración: 02minமெல்பனில் இலங்கைப் பெண்ணான நிலோமி பெரேரா அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் குறித்த நபருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"என்ன கருத்தைப் பதிந்தாலும் சர்ச்சை தான்"
19/12/2024 Duración: 26minபதிப்பாளர், எழுத்தாளர், வலைப்பூக்களில் தொடர்ந்து தன் கருத்துகளைப் பதிந்து வருபவர், cricinfo.com என்ற கிரிக்கட் இணையதளத்தை நிறுவிய இருவரில் ஒருவர், பொறியாளார் என்று பன் முகம் கொண்ட பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்காணல். நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன்.
-
தமிழ் சமூக விடுதலைக்காக நாத்தீகத்தோடு கைகோர்த்த ஆன்மீகவாதி
19/12/2024 Duración: 08minதமிழ்நாட்டில் சமயப் பணிகளை மட்டுமல்லாமல் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டவர் குன்றக்குடி அடிகளார். ஆதி திராவிடர்களை கோவில்களுக்குள் அனுமதித்தவர்; சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு, பூஜைகள் நடத்த வலியுறுத்தியவர்; தமிழ் இலக்கியவாதியாக பல நூற்களை எழுதியவர்; நாத்தீகவாதிகளோடு கைகோர்த்தவர். தமிழ் சமூக விடுதலைக்கு இறுதிவரை உழைத்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு பிறந்த விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.
-
SBS ஒலிபரப்புகள் ஆஸ்திரேலிய ஒலிக் காப்பகத்தில் நிரந்தரமாக சேர்க்கப்பட்டன
19/12/2024 Duración: 08minஆஸ்திரேலியாவின் கலாச்சார மற்றும் அரசியல் சூழலை விளக்கும் பத்து அசாதாரண ஒலிப்பதிவுகளை National Film & Sound Archive தனது Sounds of Australia காப்பகத்தின் சேகரிப்பில் சேர்த்துள்ளது.
-
நாங்களும் நிலவில் காலடி பதிக்கப் போகிறோம் !
19/12/2024 Duración: 06minசந்திரனுக்கு அனுப்பப்படும் முதல் ஆஸ்திரேலிய தானியங்கி வாகனமான Roo-ver இன் முன்மாதிரி அடிலெய்ட் நகரில் வெளியிடப்பட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
மூன்று ஆண்டுகளின் பின் ஆஸ்திரேலிய தூதரகம் யுக்ரேனில் திறக்கப்படுகிறது
18/12/2024 Duración: 03minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 19 டிசம்பர் 2024 வியாழக்கிழமை
-
Mid-year budget update: சர்வதேச மாணவர் விசா கட்டணம் $1600 ஆக அதிகரிப்பு
18/12/2024 Duración: 07minMid-year budget update எனப்படும் நிதிநிலை அறிக்கையின் மேம்படுத்தலை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers வெளியிட்டுள்ளார். இது தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் surplus - உபரி நிலைக்குப் பின்னர் பட்ஜெட் மீண்டும் déficit - பற்றாக்குறை நிலைக்குச் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். After recording two years of budget surplus, the Labor government says it expects a small deficit in the 2024-25 Financial Year, according to the government's mid-year budget update.
-
குழந்தைகள் மற்றும் முதியவர்களில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தொற்று தொடர்பில் எச்சரிக்கை
18/12/2024 Duración: 02minஆஸ்திரேலியாவில் Invasive pneumococcal disease (IPD) என்ற உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா நோய்த்தொற்றின் பரவல் விகிதங்கள் 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
குடும்பப் படங்களில் காவியம் தீட்டிய பீம்சிங்
18/12/2024 Duración: 10minதமிழ் திரையுலகில் என்றும் நிழலாடும் திரைப்படங்களை இயக்கியவர் பீம்சிங் அவர்கள். திரைக்கதை, அக்கதையை இயக்கும் லயம், படத்தொகுப்பில் காட்டும் நுணுக்கம் இவையே ஒரு படத்தின் வெற்றிக்கு ஆணிவேர் என்பதை பீம்சிங்கின் படங்கள் இன்றும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு இந்தாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில், தமிழ் திரையுலகில் அவர் பதித்த தடங்களை விவரிக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி: இலங்கை அதிபரின் இந்திய பயணம் & அதிமுக-பாஜக கூட்டணி
18/12/2024 Duración: 08minஇலங்கை அதிபரின் இந்திய பயணம் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய சர்ச்சை தொடர்பான செய்திகளின் பின்னணிகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
பாலி 9: மயூரன் & ஆண்ட்ரூவின் மரணதண்டனையும், எஞ்சியவர்களின் விடுதலையும்
17/12/2024 Duración: 07minஇந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவந்த பாலி 9 போதைப்பொருள் கடத்தல் குழுவைச்சேர்ந்த ஐந்து ஆஸ்திரேலியர்களும் நாடு திரும்பியுள்ளர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
Border-Gavaskar Trophy: Josh Hazlewood மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார்
17/12/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/12/2024) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஒவ்வொரு வாரமும் சீனாவிலிருந்து மெல்பனுக்கு வந்துபோகும் மாணவன்
17/12/2024 Duración: 03minசர்வதேச மாணவர் ஒருவர் தனது பல்கலைக்கழக வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக, வாரத்திற்கு ஒருமுறை சீனாவிலுள்ள தனது சொந்த ஊரிலிருந்து மெல்பனுக்கு விமானப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் சில பகுதிகளில் தொடரவுள்ள கடும் வெப்பநிலை
17/12/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
ஊதியத்திருட்டு: இலங்கை முன்னாள் துணைத்தூதருக்கு அபராதம் விதித்துள்ள ஆஸ்திரேலிய நீதிமன்றம்
16/12/2024 Duración: 02minகிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்பராவில் இலங்கையின் துணைத்தூதராக கடமையாற்றிய ஹிமாலி அருணதிலகவின் வீட்டுப் பணியாளராக வேலைசெய்த பெண், பணிச் சுரண்டலுக்குள்ளானதாக கூறப்படும் வழக்கில் மேலுமொரு தொகை பணத்தை அபராதமாக செலுத்துமாறு, ஹிமாலி அருணதிலகவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“Gukesh has achieved his dream” – Coach of the World Chess Champion - செஸ் சாம்பியன் குகேஷ் எப்படி சாதித்தார்? – பயிற்றுனர் பதில்
16/12/2024 Duración: 09min18-year-old Gukesh Dommaraju has made Tamil Nadu proud by clinching the World Chess Championship title. Achieving this milestone at such a young age, Gukesh has firmly established himself as a global chess sensation. - உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் 18 வயது இளம் வீரர் குகேஷ் தொம்மராஜு. மிக இளம் வயதில் உலக சதுரங்க வீரர் என்ற சாதனையையும் தட்டிச்சென்றுள்ளார் குகேஷ். அவருடைய பயிற்சியாளர் சென்னையில் வாழும் Chess Grand Master, விஷ்ணு பிரசன்னா வசந்த பெருமாள் அவர்கள்.
-
Breast Screening: A vital tool for early detection - மார்பக புற்றுநோய் பரிசோதனையை எப்படி இலவசமாக பெறலாம்?
16/12/2024 Duración: 11minBreast screening is a critical method for the early detection of breast cancer, offering women an opportunity to identify potential issues before symptoms arise. A/Professor Nirmala Pathmanathan, Executive Director of the Westmead Breast Cancer Institute in Western Sydney, NSW, highlights the significance of this free service and its role in improving health outcomes for women. Dr. Pathmanathan is an anatomical pathologist with expertise in breast diseases. She is the Director for BreastScreen Program for Sydney West and also chair of the BreastScreen NSW pathology group and a Clinical Associate Professor with the University of Sydney, Faculty of Medicine and Health. Interviewed by: RaySel - பெண்களின் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே அறிந்துகொள்ள நடைமுறையிலுள்ள பரிசோதனை முறை Breast Screening என்று கூறப்படும் mammograms ஆகும். இலவசமாக தரப்படும் இந்த பரிசோதனையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் NSW மாநிலத்தில் மேற்கு சிட்னியில் இயங்கும் Westmead Breast Cancer Institute யின் நிர்வாக இயக்குனர் இணைப் பேராசிரியர் மர
-
Cricket explained: an easy guide so you can enjoy the cricket season in Australia - கிரிக்கெட்டின் அடிப்படைகள் மற்றும் வெவ்வேறு வடிவங்கள்!
16/12/2024 Duración: 08minCricket is immensely popular in Australia, and it has long been part of Australian culture, especially during the summer months. It brings families and communities together during the holidays. Learn the basics of the game and about the different formats, from the traditional Test matches to the fast-paced T20 games. Whether you are already a cricket fanatic, or new to the game, we’ll guide you through the most popular tournaments so you can also get excited and take part in the cricket season in Australia. - ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலம் என்பது நமக்குத் தெரியும். மேலும் இது நீண்ட காலமாக ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, குறிப்பாக கோடை மாதங்களில் விடுமுறை நாட்களில் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கிறது. இந்த விவரணத்தில் பாரம்பரிய டெஸ்ட் போட்டிகள் முதல் குறுகிய T20 போட்டிகள் வரை கிரிக்கெட்டின் அடிப்படைகள் மற்றும் வெவ்வேறு வடிவங்களைப் பற்றி பார்ப்போம்.