Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • Accord aims to 'put more kids on smart street': Minister - பல்கலைக்கழகங்களின் செயற்பாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் கல்வித்துறையை மேம்படுத்துமா?

    28/02/2024 Duración: 12min

    It’s been described as a landmark report into the university sector with a focus on making education fairer and more accessible. The Universities Accord has been a year in the making, outlining huge changes to the sector, including boosting universities enrolments, and filling skills shortages in critical sectors. Selvi has produced this feature with the comments from Professor Ampalavanapillai Nirmalathas of the University of Melbourne. - Universities Accord மதிப்பாய்வு அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தது. பல்கலைக்கழகங்களின் செயல்திறன் குறித்த இந்த மதிப்பாய்விற்கான அவசியம், இதில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விமர்சனம் குறித்து மெல்பன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுபவரும் அரசியல் அவதானியுமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களின் கருத்துகளோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • அரசின் வரிக் குறைப்புத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

    27/02/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/02/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • வெளிநாட்டில் இருந்தபடியே இங்குள்ள வேலையை செய்ய ஆசையா ? இந்த விசா உங்களுக்காக!!

    27/02/2024 Duración: 02min

    சில நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவிற்குள் இருந்து வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை வேறு நாடுகளிலும் இருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. இதெற்கென சில நாடுகள் பிரத்தியேக விசா வழங்குகின்றன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • பெண் என்றால் payயும் இறங்கும்

    27/02/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/02/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • Socio-Economic Impact of Taylor Swift's Australian Tour - தீ எனப் பரவும் டெய்லர் ஸ்விஃப்ட் ஏற்படுத்தும் சமூக-பொருளாதார தாக்கம்

    26/02/2024 Duración: 11min

    Taylor Swift, the renowned American singer-songwriter, has left an indelible mark on the Australian landscape through her recent tour, distinguishing it from any other musical endeavour in the region. The concerts held in Victoria and New South Wales have not only captivated audiences but also catalysed significant social and economic transformations. - புகழ்பெற்ற அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் Taylor Swift, தனது சமீபத்திய சுற்றுப் பயணத்தின் மூலம் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் நடைபெற்ற அவரது இசைக் கச்சேரிகள், பார்வையாளர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

  • இந்தியாவின் தற்கால நிகழ்வுகள்!!

    26/02/2024 Duración: 08min

    இந்திய அரசியலில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட 'இந்தியா' கூட்டணி மீண்டும் எழுச்சி, இந்தியாவில் புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல், தமிழக காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி, பாஜகவில் இணைந்துள்ளது மற்றும் தமிழக அரசியலில் கூட்டணி பரபரப்புகள் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ஆண்கள் கல்லூரிக்கு பெண் எப்படி அதிபராகலாம்? யாழில் போராட்டம்

    26/02/2024 Duración: 10min

    யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். இக்கல்லூரியின் 208 ஆண்டுகால வரலாற்றில் இப்படி நடந்ததில்லை எனத் தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் செயற்பாடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • மேற்கு விக்டோரியாவில் எரிந்துவரும் காட்டுத் தீ - இந்த வாரமும் தொடரும் என்று எச்சரிக்கை!!

    26/02/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/02/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    24/02/2024 Duración: 05min

    இந்த வார முக்கிய செய்திகள்: 24 பெப்ரவரி 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • மாணவர் விசா வழங்கப்படும் எண்ணிக்கையில் வீழ்ச்சி : இந்திய மாணவர்கள் பாதிப்பு!!

    23/02/2024 Duración: 02min

    மாணவர் விசா அனுமதி விகிதங்கள் 5 சதவிகிதம் குறைந்துள்ளன. சமீபத்திய அரசாங்க தரவுகளின்படி, இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தியை வழங்குகிறார் செல்வி.

  • "Paal Dabba" on Australian Stages - ஆஸ்திரேலிய மேடைகளில் “பால் டப்பா”

    23/02/2024 Duración: 09min

    Anish, the Chennai-based artist known for his rap persona as "Paal Dabba," is currently captivating audiences across Melbourne and Sydney during his tour in Australia. - பால் டப்பா என்ற மேடைப் பெயருடன் Rap இசைப் பாடகராக மக்களைக் கவர்ந்து வரும் சென்னைக் கலைஞர் அனீஷ் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்.

  • Every scientific concept can be easily explained in Tamil prose ! - அனைத்தையும் தமிழ் வெண்பாக்களாகப் பாடமுடியும்

    23/02/2024 Duración: 19min

    Dr. T S Subbaraman holds a doctorate in Physics and was a former Head of the Physics department at Anna University, Chennai. Though his specialisation is Physics, his heart favours Tamil. He had been passionate about Tamil theatre. He has performed on stage from the age of nine. He has also performed in various TV and radio dramas. He has the credit of making the science show "Maanudam ventradu," which was aired in All India Radio for three continuous years. In recognition of Dr. Subbaraman's passion for Tamil, Anna University appointed him as the first Director of the Centre for Development of Tamil in Engineering and Technology in 2001. - Dr.T. S. சுப்பராமன் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை முன்னாள் தலைவராக இருந்தவர். இது அவரது ஒரு பக்கம். அவரது சிறப்பு இயற்பியலாக இருக்கலாம், ஆனால் அவரது ஆர்வம் தமிழ் மொழி மீது தான். டாக்டர் சுப்பராமன் ஒன்பது வயதிலிருந்து தமிழ் நாடகங்களில் நடித்துள்ளார், பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். அவரது அறி

  • காட்டுத்தீ: விக்டோரிய மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர்

    23/02/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/02/2024) செய்தி.

  • What is the cultural significance of First Nations weaving? - பூர்வீகக்குடியின நெசவுகளின் கலாச்சார முக்கியத்துவம் என்ன?

    23/02/2024 Duración: 08min

    Weaving is one of the most complex and sophisticated examples of First Nations technology and culture. It produces objects of beauty, and the process itself has deep cultural significance. Weaving is a way to share knowledge, connect to people and country, invite mindfulness, and much more. - நெசவு நெய்தல் அல்லது பின்னுதல், திரித்தல் என்பது பூர்வீகக்குடி மக்களின் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன எடுத்துக்காட்டுகளில் ஒன்று. இது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    22/02/2024 Duración: 08min

    யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தூதுவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்; காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தினரின் போராட்டம் 07 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது; எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை கண்டித்து யாழ். இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்; தமிழக மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாது போன இந்திய பக்தர்கள். இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Taylor Swift The Eras Tour Australia 2024 - sold-out concerts to 80,000 Swifties each night - ஆஸ்திரேலியாவில் மையம் கொண்டுள்ள Taylor Swift எனும் இசைப்புயல்

    22/02/2024 Duración: 11min

    The singer is due to perform four sold-out concerts from Friday to Monday to 80,000 Swifties each night. Who is Taylor Swift? Praba Maheswaran presents a news explainer with comments from few fans of Swift. - அமெரிக்கப் பாடகி மற்றும் பாடலாசிரியர் Taylor Alison Swift அவர்களின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் மிகப்பிரமாண்டமான முறையில் நுழைவுச்சீட்டுகள் அனைத்துமே விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் நடைபெறுகின்றது. சமூக ஊடகங்களில் சுமார் 534 million followers உடன் உலகளாவிய இசை இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த அந்த Taylor Swift என்பவர் யார்? பாடகி Taylor Swiftஇன் சில தமிழ் இரசிகர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • உலகில் முதன்முதலாக ஒரு புதிய வகை வாழைப்பழம் ஆஸ்திரேலியாவில் அறிமுகம்!!

    22/02/2024 Duración: 02min

    உலகில் முதன்முதலாக, ஒரு புதிய வகை வாழைப்பழம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உணவு தரநிலைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • தெரிந்ததும், தெரியாததும்: தமிழ் திரைப்பட பாடல்கள்

    22/02/2024 Duración: 15min

    தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் குறித்த பின்னணியோ அல்லது அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றியோ பலருக்கும் தெரியாத தகவல்களை இசை கலந்து படைக்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள். இந்த நிகழ்ச்சி 2013 ஆண்டு தயாரிக்கப்பட்டது.

  • Is this the solution to the lack of rental housing? - வாடகைக்கு வீடுகளில்லை என்பதற்கு இது தீர்வாகுமா?

    22/02/2024 Duración: 11min

    The NSW government is contemplating a tax on short-term renters as a potential solution to Australia's housing shortage, particularly the rental housing crisis. A comparable taxation initiative is also currently in progress in the state of Victoria. In this context, we delve into the topic of "Housing Shortage and Taxation." Chidambaram Rangarajan who works in defence related projects shares his perspectives on this matter. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் நிலவும் வீடுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, குறிப்பாக வாடகைக்கு வீடுகளில்லை என்ற நெருக்கடிக்கு ஒரு தீர்வாக குறுகிய காலம் வீடுகளை வாடகைக்கு விடுவோர் மீது வரி விதிக்க NSW அரசு ஆலோசிக்கிறது. இதுபோன்ற வரிவிதிப்பு முயற்சி விக்டோரியா மாநிலத்திலும் முன்னெடுக்கப்படும் நிலையில், “வீடு பற்றாக்குறையும் வரி விதிப்பும்” குறித்து விளக்குகிறோம். இது குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • Students targeted to become money mules - and face severe consequences - “வீட்டிலிருந்து கொண்டே லட்சம் லட்சமாக சம்பாதியுங்கள்” – உண்மையா?

    22/02/2024 Duración: 09min

    There are new warnings about those work-from-home job ads that seems too good to be true - or promise BIG returns on investment. Many are trying to recruit so-called 'Money Mules'. The Australian Federal Police and financial institutions say more criminal syndicates are targeting students to become money mules. The story by Madina Jaffari for SBS News, produced by RaySel for SBS Tamil. - ஏமாற்று நிறுவனங்கள்அல்லது குற்றவியல் சிண்டிகேட்கள் பண நெருக்கடியில் இருப்போரையும், சர்வதேச மாணவர்களையும் குறிவைத்து பெரும் மோசடிகளை நடத்திவருவதாக பலமட்டங்களில் எச்சரிக்கை வந்துள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Madina Jaffari. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

página 11 de 26